Thursday, October 25, 2012

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

Recently mentioned by a friend...

Abhirami Pathigam

கலையாத கல்வியும்
குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும்
குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்

சலியாத மனமும்
அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும்
மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்

துலையாத நிதியும்
கோணாத கோலும்
ஒரு துன்பமிலாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் அன்பும்
உதவி பெரிய தொண்டரோடு
கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலும் மா
யானது தங்கையே
ஆதி கடவூரின் வாழ்வே

அமுதீசர் ஒரு பாகம்
அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே

0 comments